திரிஷாவா, நயன்தாராவா? நடிகர் கவின் கூறிய பதில்
நடிகர் கவின்
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடந்து ஆண்டு வெளிவந்த டாடா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது ஸ்டார் படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை.
டாடா படம் பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கவின் நடிப்பில் தீபாவளி பண்டிகை அன்று வெளியான திரைப்படம் பிலடி பெக்கர்.
அறிமுக இயக்குனரான சிவபாலன் இயக்கத்தில் முதன் முதலாக நெல்சன் திலீப்குமார் தயாரித்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதிர்ச்சி பதில்
இந்நிலையில், படத்தின் பிரமோஷன் பேட்டிகளில் கலந்து கொண்ட போது கவினிடம் அவருக்கு திரிஷாவா அல்லது நயன்தாராவா இருவரில் யாரை மிகவும் பிடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு, நடிகை திரிஷாவை நீண்ட நாட்களாக எனக்கு பிடிக்கும் என்று பதிலளித்துள்ளார். மேலும், தற்போது நயன்தாராவும் எனக்கு மிகச்சிறந்த நண்பராக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த பேட்டி சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
