ஸ்டார் படம் மூலம் அதிரடி காட்டும் நடிகர் கவின்... படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ்
நடிகர் கவின்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் நடிகர் கவின்.
முதல் தொடர் கொஞ்சம் ரீச் கொடுக்க பல போராட்டங்களுக்கு பிறகு சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் நாயகனாக மாறினார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸில் கலந்துகொண்டவர் சுமாராக விளையாடி இருந்தார். பின் கவினின் திரைப்பயணத்திலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் படமாக அமைந்தது தான் டாடா. இந்த படம் மூலம் கவினுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி அங்கீகாரம் கிடைத்தது.
இப்பட வெற்றிக்கு பிறகு அவர் யாருடன் கூட்டணி அமைப்பார், என்ன படம் நடிப்பார் என பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அந்த நேரத்தில் வந்த தகவல் தான் ஸ்டார் பட தகவல்.
பாக்ஸ் ஆபிஸ்
பியார் பிரேமா காதல் பட புகழ் இளன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் கவின் நடித்த ஸ்டார் படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் பட்டய கிளப்பி வருகிறது.
படம் வெளியாகி 9 நாட்களில் ரூ. 20 கோடி வரை வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
