விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நடிகர் கவின்.. காப்பாற்றிய மதுரை மக்கள்!!
கவினின் மாஸ்க்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் கவின். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் மாஸ்க்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்க ஆண்ட்ரியாவுடன் இணைந்து கவின் இப்படத்தில் நடித்திருக்கிறார். நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மாஸ்க் படக்குழுவினர் படத்தின் புரோமோஷனை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் பிரபல கல்லூரியில் இப்படத்தின் புரோமோஷன் நடைபெற்றது. இதில் நடிகர் கவின், மதுரையில் தனக்கு நடந்த விபத்து குறித்து மனம் திறந்து பேசினார்.
விபத்தில் சிக்கிய கவின்
இதில், "மதுரையில் 2012ஆம் ஆண்டு எனக்கு விபத்து ஏற்பட்டது. ஆனால், இன்று நான் உங்கள் முன் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன் என்றால், அதற்கு காரணமே மதுரை மக்கள்தான். ஒரு சாலை விபத்தில் நான் என்னுடைய நெருங்கிய நண்பர்களை இழந்திருக்கிறேன். அந்த சமயத்தில் மருத்துவர்கள் என்னிடம் சொன்னது, 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் முன் கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று.

ஆனால், எனக்கு தெரியவில்லை நான் செய்த புண்ணியமா இல்லை என் பெற்றோர் செய்த புண்ணியமா, அன்று மதுரை மக்கள்தான் என்னை வண்டியில் இருந்து காப்பாற்றி ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு சென்று என் உயிரை காப்பாற்றினார்கள். எனக்கு அவர்கள் யார் என்று கூட தெரியாது. ஆனால், அந்த நபர்கள் அங்கு அன்று இல்லை என்றால் நான் இன்று இங்கு இல்லை" என கூறியிருந்தார் கவின்.