சில காட்சிகளை நீக்கச் சொன்னேன்.. ஸ்டார் படத்தின் ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் கவின்
நடிகர் கவின்
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த 'ஸ்டார்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கவின் நடிப்பில் வரும் அக்டோபர் 31 - தேதி அதாவது, தீபாவளி பண்டிகையையொட்டி 'பிளடி பெக்கர்' என்ற திரைப்படம் வெளிவர உள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் இயக்கியுள்ளார். தற்போது, இந்த படத்திற்காக பல பேட்டிகளில் படக்குழுவினர் மற்றும் கவின் கலந்து கொண்டு வரும் நிலையில், சினிஉலக பேட்டியில் கவின் 'ஸ்டார்' படம் குறித்து சில அதிரடி தகவலை பகிர்ந்துள்ளார்.
ரகசியம்
அதில், "ஸ்டார் படத்தின் கதையை முதலில் கேட்டபோது எனக்கு பிடித்தது. அதன் காரணமாக தான் அந்த படத்தில் நடித்தேன். ஆனால், இறுதியில் படம் கொஞ்சம் நீண்டு கொண்டே போனது போல் இருந்தது.

அதனால் 20 நிமிட காட்சிகளை நீக்கச் சொன்னேன். சில காட்சிகள் படத்திலிருந்து விலகி இருந்தது அது நன்றாக இருக்கும் காட்சிகளையும் சேர்த்து கெடுக்கும் என்று கூறினேன். இருப்பினும், படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால், இறுதியில் நான் கூறியது போல் தான் நடந்தது" என்று கூறியுள்ளார்.
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu