தன்னை விட 5 வயது அதிகமான நடிகையுடன் இணையும் கவின்.. அதுவும் வெற்றிமாறன் படத்தில்
நடிகர் கவின்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஸ்டார் படம் வருகிற மே 10ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், கவின் கைவசம் இன்னும் இரு திரைப்படங்கள் உள்ளன. அதில் கவின் 5வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். மேலும் கவின் 6வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் மீதமுள்ளது என அவரே கூறியிருந்தார்.
பிரபல நடிகையுடன் இணையும் கவின்
இந்த நிலையில், அடுத்ததாக கவின் நடிக்கப்போகும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் என்பவர் இயக்கவுள்ள திரைப்படத்தில் தான் கவின் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.
மேலும் இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதன்மூலம் கவின் - ஆண்ட்ரியா முதல் முறையாக இணைகிறார்கள்.
திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
