வாட்ஸ் அப் பிரச்சனைக்கு கவுண்டமணி செந்தில் ஜோக்! அதுவும் என்ன சீன் பாருங்க - மீம் இதோ!
வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் புதிய விதிமுறைகளை வகுத்தது. இதன் படி அதன் பயனாளர்கள் சில விசயங்களுக்கு ஓகே சொல்ல வேண்டும் என்றது. ஆனால் இந்த விசயத்தால் சுய விவரங்கள் ஃபேஸ்புக்குடன் பகிரப்படும் என சொல்லப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.
இதற்கு 8 ம் தேதி வரை காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சிலர் இந்த புதிய முறையை ஏற்றுக்கொண்டாலும் பலர் வேறு சில சமூக வலைதள செயலிலளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
உலகில் எங்கு என்ன விசயம் நடந்தாலும் யார் சும்மா இருக்கிறார்களோ இல்லையோ நெட்டிசன்கள் ஏதாவது மீம் போட்டு வேடிக்கை காட்டிவிடுகிறார்கள். அது பலரையும் சிரிக்கவைத்து விடுகிறது.
இந்நிலையில் இந்த வாட்ஸ் அப் விவகாரத்திற்கும் நெட்டிசன்கள் செந்தில், கவுண்டமணி, கோவை சரளா காமெடி காட்சியை போட்டு கலாய்த்துள்ளனர்.
அடேய்?? pic.twitter.com/w6LvRGCEQW
— Rizwan (@itsrizu05) January 11, 2021