முழு மேக்கப்பில், மணப்பெண் போல் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை முல்லை.. அழகிய போட்டோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கிறது.
இதில் தனம், மூர்த்தி, முல்லை, கதிர் என பல முன்னணி கதாபாத்திரங்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது.
சித்ராவின் மரணத்திற்கு பிறகு தற்போது முல்லை கதாபாத்திரத்தில் இளம் நடிகை காவ்யா என்பவர் நடித்து வருகிறார்.
இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முல்லை கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் நடிகை காவ்யா.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகை காவ்யா, தற்போது முழு மேக்கப்பில், மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..