இசையமைப்பாளர் அனிருத், காவ்யா மாறன் இருவருக்கும் திருமணம்... எங்கே, எப்போது நடக்கிறது, கசிந்த தகவல்
அனிருத்
தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் அனிருத்.
இன்றைய கால இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப மிகவும் துள்ளலான பாடல்கள் கொடுத்து கலக்கி வருபவர். முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே அனிருத் இசை தான் என உள்ளது. படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி இசைக் கக்சேரிகளை படு பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார்.

திருமணம்
சினிமா பாடல்கள், இசைக் கச்சேரிகள் என பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.
ஏற்கெனவே அனிருத்-சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வந்தன.

தற்போது அனிருத்-காவ்யா மாறன் திருமணம் குறித்து முக்கிய செய்தி வந்துள்ளது. வரும் நவம்பர் 12ம் தேதி Seychelles என்ற இடத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாம்.