விரைவில் திருமணம் செய்யப்போகும் காவ்யா மாறன்-அனிருத் சொத்து மதிப்பு... எத்தனை கோடிகள் தெரியுமா?
அனிருத்
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மாஸாக இசையமைத்து கலக்கி வருகிறார்.
கடைசியாக இவர் இசையமைத்த ரஜினியின் ஜெயிலர் 2 படம் வெளியாகி அனிருத் இசைக்கும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. இப்போது அனிருத்தின் திருமணம் பற்றிய பேச்சு தான் தமிழ் சினிமாவில் அதிகம் உள்ளது.

இவர் ஐபிஎல் அணியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஓனர் காவ்யா மாறனை காதலித்து திருமணம் செய்கிறார். வரும் நவம்பர் 11ம் தேதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்க நவம்பர் 21ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது.
இவர்களின் திருமணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், மற்ற மாநில முதல்வர்கள், தமிழ் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இவர்களின் திருமணம் எப்போது, எப்படி நடக்கும் என்பதை காண மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சொத்து மதிப்பு
ஒரு படத்துக்கு இசையமைக்க அனிருத் ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என கூறப்படுகிறது. இதுதவிர இசைக் கச்சேரிகள், விளம்பரங்கள் என்றும் ஆக்டீவாக உள்ளார்.
எல்லாவற்றையும் சேர்த்து இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.

அதேபோல் சன் குரூப் தலைவர் கலாநிதி மாறனின் ஒரே மகளான காவ்யா மாறனின் மகளான காவ்யா மாறன் சொத்து மதிப்பு ரூ. 1331 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த சொத்து மதிப்பு விவரங்கள் என்ற அளவிற்கு சரியானது என்பது தெரியவில்லை.
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri