உடன்பாடில்லாத ஆடை, காட்சிகள் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை கயாடு லோஹர்..

By Karthick Raja Jul 11, 2026 08:10 AM GMT
Report

கயாடு லோஹர்

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் தமிழில் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

உடன்பாடில்லாத ஆடை, காட்சிகள் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை கயாடு லோஹர்.. | Kayadu Lohar About Discomfort Dress And Scene

மேலும் இவர் நடித்த இதயம் முரளி திரைப்படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. அடுத்ததாக Immortal, I'm Game, மஞ்சணத்தி, The Paradise, சூர்யா 48 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

உடன்பாடில்லாத ஆடை, காட்சிகள் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை கயாடு லோஹர்.. | Kayadu Lohar About Discomfort Dress And Scene

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த Heart Beat சீசன் 3.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த அறிவிப்பு வீடியோ..

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த Heart Beat சீசன் 3.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த அறிவிப்பு வீடியோ..

வெளிப்படையாக பேசிய நடிகை

தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் கயாடு லோஹர், பேட்டி ஒன்றில் தனக்கு உடன்பாடில்லாத ஆடை மற்றும் காட்சிகள் குறித்து உடனடியாக இயக்குநர் மற்றும் படக்குழுவிடம் பேசிவிடுவதாக கூறியுள்ளார்.

உடன்பாடில்லாத ஆடை, காட்சிகள் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை கயாடு லோஹர்.. | Kayadu Lohar About Discomfort Dress And Scene

இதுகுறித்து அவர் பேசியது, "படப்பிடிப்பில் எனக்கு உடன்பாடில்லாத ஆடை அல்லது காட்சிகள் இருந்தால் இயக்குநர், படக்குழுவினரிடம் வெளிப்படையாக பேசிவிடுவேன். ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட எல்லைகள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும். திறந்த உரையாடலே பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான பணி சூழலை உருவாக்கும். எனவே நம்முடைய எல்லைகளில் உறுதியாக இருப்பதும், நம் கவலைகளை தெரிவிப்பதும் மிகவும் முக்கியம்" என கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US