மாஸ் ஹிட்டடித்த டிராகன் திரைப்படம்.. கூலாக வீடியோ வெளியிட்டு கயாடு லோஹர் சொன்ன விஷயம்
டிராகன் படம்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த திரைப்படம் டிராகன்.
வசூல் வேட்டையில் சாதனை படைத்துவரும் இப்படம் ரூ. 80 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையை தாண்டி ரசிகர்களால் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருபவர் கயாடு லோஹர்.
படம் ரிலீஸ் ஆன நாள் முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
வீடியோ
தமிழில் அவருக்கு டிராகன் தான் முதல் படம். ஆனால் இப்படத்திற்கு முன் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார்.
டிராகன் படத்தில் பல்லவியாக நடித்து தமிழ் சினிமா இளைஞர்களின் க்ரஷ்ஷாக கயாடு லோஹர் மாறியுள்ளார். தற்போது படம் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், எனக்கு எப்படி தொடங்குவது என தெரியவில்லை, திரையரங்கில் எனக்கு நீங்கள் அடிக்கும் விசிலாகட்டும், இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதையெல்லாம் பார்க்கம் போது சந்தோஷமாக உள்ளது.
நீங்கள் கொடுக்கும் அன்பு விலைமதிப்பற்றது, இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி தருவேன், உங்களை பெருமைப்பட வைப்பேன் என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
