'எளிதில் ஏமாந்து போவேன்'.. பலம், பலவீனம் குறித்து பேசிய நடிகை கயாடு லோஹர்..

By Karthick Raja Jul 29, 2026 09:00 AM GMT
Report

கயாடு லோஹர்

இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார் கயாடு லோஹர். இவர் தமிழில் வெளிவந்த டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் இதயம் முரளி திரைப்படம் வெளியானது.

இதன்பின், இம்மார்ட்டல், மஞ்சணத்தி, சூர்யா 48 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், I'm Game, பாரடைஸ், தாரம் என பிறமொழி திரைப்படங்களும் கயாடு லோஹர் நடிப்பில் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கேரவனில் அத்துமீறி நுழைந்த நபர்.. அதிர்ச்சியடைந்த நடிகை காஜல் அகர்வால்

கேரவனில் அத்துமீறி நுழைந்த நபர்.. அதிர்ச்சியடைந்த நடிகை காஜல் அகர்வால்

பலம், பலவீனம்

திரையுலக பிரபலங்கள் பேட்டிகளில் பேசும் விஷயங்கள் ரசிகர்களிடையே அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில், நடிகை கயாடு லோஹர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது பலம் மற்றும் பலவீனம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

"என் நம்பிக்கை தான் என் பலம். பல சூழல்களில் என் நம்பிக்கை மட்டுமே எனக்கு துணையாக நின்றுள்ளது. அதேவேளை நான் எளிதில் ஏமாந்து போவேன். அது என் பலவீனம். இந்த பலவீனத்தால் பல இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறேன்" என கூறியுள்ளார். நடிகை கயாடு லோஹரின் இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US