நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை! ரிலேஷன்ஷிப் குறித்து பேசிய நடிகை கயாடு லோஹர்
கயாடு லோஹர்
இன்றைய சென்சேஷனல் நாயகிகளில் ஒருவர் கயாடு லோஹர். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியும் இவர் தான். சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளிவந்தது. கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார்.
கயாடு லோஹர் பேச்சு
இந்த நிலையில், சமீபத்தில் ரிலேஷன்ஷிப் குறித்து நடிகை கயாடு லோஹரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சிரித்துக்கொண்டே கயாடு லோஹர் கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறியதகவது "இன்றைய தலைமுறை புதுப்புது வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்களை கண்டுபிடித்து வருகிறார்கள். எனக்கு தெரிந்து 'ஷிப்' என்றால் கப்பல் தான். நீங்கள் கூறுவது போல் இப்போது ரிலேஷன்ஷிப், சிச்சுவேஷன்ஷிப் என பல 'ஷிப்'கள் வந்துவிட்டன. நீங்கள் நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை. நான் ரொம்ப நல்ல பொண்ணு. நான் இப்பொது எந்த ஒரு ஷிப்பிலும் இல்லை. அவ்வளவு எளிதாக எதிலும் மாட்டிக்கொள்ள மாட்டேன்" என கயாடு லோஹர் கூறியுள்ளார்.

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
