கயாடு லோகருக்கு பெரும் ஏமாற்றம்.. அடுத்தடுத்து கைவிட்டுப்போன 2 டாப் படங்கள்
கயாடு லோஹர்
இன்றைய சென்சேஷனல் நாயகிகளில் ஒருவர் கயாடு லோஹர். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியாவும் நடிப்பார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வந்தது.
கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார்.
பெரும் ஏமாற்றம்
இந்நிலையில், தற்போது சிம்பு மற்றும் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்திலும் கயாடு லோகர் நடிப்பதாக இருந்தது.
ஆனால், தற்போது வெளிவந்த தகவலின் படி, சிம்பு மற்றும் தனுசுடன் அவர் நடிக்க இருந்த 2 படங்களும் கைவிட்டு போனது.
2 படங்களும் கைவிட்டு போன நிலையில் கயாடு லோகர் மலையாள படமொன்றில் டொவினோ தாமசுடன் இணைந்து நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
