நான் நிஜமாகவே கர்ப்பமாக இருந்தேன்.. மேடையில் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த கயல் ஆனந்தி
கயல் ஆனந்தி
கயல் படத்தில் அப்பாவி பெண்னாக நடித்து எல்லோரது மனதையும் கவர்ந்தவர் நடிகை ஆனந்தி. அந்த படத்திற்கு பிறகு அவரை எல்லோரும் கயல் ஆனந்தி என்று தான் அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அவரது ஐடி கார்டாக மாறிவிட்டது கயல் படம்.
தற்போது அவர் யுகி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதன் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது தான் கர்ப்பமாக இருந்தது பற்றி அவர் பேசி இருக்கிறார்.
கர்ப்பம்
மேடையில் பேசிய ஆனந்தி, 'இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல், ஏனென்றால் இதில் நடிக்கும்போது நான் நிஜத்திலேயே கர்பமாக இருந்தேன்' என கூறி இருக்கிறார். அதனால் தற்போது அவர் குழந்தைக்கு அம்மா ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்தி அலாவுதீனின் அற்புத கேமரா என்கிற படத்தில் நடித்தபோது, அதில் துணை இயக்குனராக பணியாற்றிய சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் நவீனின் உறவினர் தான் சாக்ரடீஸ் என்பது கூடுதல் தகவல். ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறார், வளைகாப்பு நடைபெற போகிறது என கடந்த வருடமே செய்தி வந்தது, ஆனால் அதை உறுதி செய்ய புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது அவரை மேடையில் தனக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை உறுதி செய்திருப்பது பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது.
பொன்னியின் செல்வன் 2 காட்சிகளை மீண்டும் எடுக்கும் மணிரத்னம்! என்ன காரணம்?