உயிருக்கு போராடும் காமாட்சி.. கயல் நிச்சயதார்த்தம் முடிந்ததா? கயல் சீரியலில் இன்று
கயல் சீரியலில் கடந்த சில வாரங்களாகவே நிச்சயதார்த்த காட்சிகள் தான் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. நிச்சயதார்த்தத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என வில்லன் பெரியப்பா பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.
மறுபுறம், அம்மா காமாட்சி வில்லி செய்த சதியால் ரத்த வாந்தி எடுத்து உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார். ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்கிற விஷயத்தை சொல்லாமல் மறைத்துவிட்டு அமைதியாக நின்று கொண்டிருக்கிறார்.
நிச்சயதார்த்தம் நடந்து முடியுமா?
இன்றைய எபிசோடில் நிச்சயதார்த்தம் நடந்து முடியுமா என்கிற கேள்வி தான் பார்க்கும் எல்லோரது மனத்தில் இருந்தது. நிச்சயதார்த்தம் என்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கயல். காமாட்சி இருக்கும் நிலை அவருக்கு புரிவதில்லை.
ஒருவழியாக இரண்டு வீட்டினரும் தட்டை மாற்றி கொள்கிறார்கள். கயலின் பெரியப்பா மற்றும் பெரியம்மா வயிற்றெரிச்சல் உடன் தான் தட்டை மாற்றுகிறார்கள்.
அதன் பின் மோதிரம் மாற்றி கொள்கின்றனர். இத்துடன் எபிசோடு நிறைவு பெற்றது. காமாட்சி உயிர்பிழைப்பாரா இல்லையா என்பதை அடுத்த எபிசோடில் தான் பார்க்க வேண்டும்.

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
