TRPயில் 1,2 இடங்களை பிடிக்க போட்டிபோட்டு கயல் மற்றும் எதிர்நீச்சல் சீரியல்- முதல் இடத்தில் எந்த தொடர்?
சன் டிவி சீரியல்
தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு பெயர் போனது சன். இந்த தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 வரை தொடர்கள் ஒளிபரப்பாகிறது, இடையில் 3 மணி நேரம் மட்டும் திரைப்படம் ஒளிபரப்பாகும்.
அதற்கு முன் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பான தொடர்கள் இப்போது சன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
சிறப்பு தொகுப்பாக 3 மணி நேரம் எல்லாம் சீரியல்களை ஒளிபரப்புகிறார்கள்.
TRP ரேட்டிங்
வாரா வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5ல் சன் தொலைக்காட்சி சீரியல்கள் அதிகம் வருகின்றன.
அப்படி சன் தொலைக்காட்சி சீரியல்களுக்குள்ளேயே டாப் 1 இடத்தை பிடிக்க எதிர்நீச்சல் மற்றும் கயல் தொடர்களுக்கு இடையில் கடும் போட்டி நடந்து வருகிறது.
கடந்த சில வாரம் முதல் இடத்தை பிடித்த எதிர்நீச்சல் தொடரை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளது கயல் தொடர்.
12.48 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடிக்க 2ம் இடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் தொடருக்கு 11.55 புள்ளிகள் வந்துள்ளன.
கணவரின் கொடுமை, விவாகரத்து என செய்த மின்சார கண்ணா பட நடிகை மோனிகாவின் தற்போதைய நிலை?