கயலுக்கு மறுபடியும் வில்லனாகும் தர்மலிங்கம்? எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அடுத்த வார ப்ரோமோ
கயல் சீரியலில் முன்பு கயல் குடும்பத்தை எப்படியாவது அழிக்க வேண்டும் என இருந்தவர் பெரியப்பா தர்மலிங்கம். ஆனால் அவர் திருந்தி அவர்கள் குடும்பத்துடன் இணைக்கமாக இருந்து நல்லது செய்து வருகிறார்.
கயலின் அண்ணன் மூர்த்தி தனக்கு பெரியப்பா தர்மலிங்கம் கேட்டரிங் தொழிலில் ஆர்டர் கொடுத்து உதவியதால் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக 28 ஆயிரம் ரூபாய்க்கு துணி எடுத்து கொடுக்கிறார்.

அடுத்த வார ப்ரோமோ
இந்த செலவு வீணான ஒன்று என கயலின் தம்பி அன்பு எல்லோரிடமும் சண்டை போடுகிறார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வடிவு அவர்கள் உடன் சண்டை போடுகிறார்.
பெரியப்பாவிடம் மன்னிப்பு கேட்கும்படி கயல் கூறியும் தம்பி அன்பு கேட்பதில்லை. அதனால் தர்மலிங்கம் அங்கிருந்து அவமானத்துடன் கிளம்பி செல்கிறார்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வடிவு மீண்டும் தர்மலிங்கத்தை கயலுக்கு எதிராக வில்லனாக மாற்றிவிடுவாரோ? ப்ரோமோவை பாருங்க.