எழில் அம்மா கொடுத்த பரிசு, திருப்பி கொடுத்த கயல்- அசிங்கப்படுத்திய உறவினர் கயல் சீரியல் புரொமோ
கயல் தொடர்
சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் புதியதாக கயல் என்ற தொடர் மூலம் இந்த தொலைக்காட்சி பக்கம் வந்த ஜோடி சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ்.
இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்த இந்த தொடரின் கிரியேட்டிவ் டைரக்டராக வைதேகி ராமமூர்த்தி உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி இந்த தொடர் தொடங்கப்பட்டுள்ளது.
அப்பாவை இழந்த தனது குடும்பத்திற்கு அனைத்து நல்லதையும் செய்ய, பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று போராடும் கயல் என்ற பெண்ணின் கதையாக தொடர் உள்ளது.
புதிய புரொமோ
இப்போது கதையில் மக்கள் அனைவரும் பெரிதும் எதிர்ப்பார்த்த கயல்-எழில் திருமண விசேஷம் நடக்க உள்ளது.
அதேசமயம் அவருக்கு நடக்க இருக்கும் நிச்சயதார்த்தம், திருமணத்தில் பிரச்சனைகளை கிளப்புவதற்காகவே அவரது குடும்பத்தினர் சூழ்ந்துள்ளனர்.
கயலிடம் எழிலின் அம்மா நகையை கொடுக்க அதை அவர் மறுக்கிறார். அதோடு எழிலின் அன்பு மட்டுமே போதும் என கூற வழக்கம் போல் அவரது பெரியம்மா-பெரியப்பா அசிங்கப்படுத்துவது போல் பேசுகிறார்கள்.
அவர்களுக்கு வழக்கம் போல் கயல் பதிலடி கொடுக்கிறார்.