தீபாவளி ட்ரெஸ்சை தூக்கி வீசிய தேவி.. மொத்த குடும்பமும் ஷாக்! கயல் சீரியலில் இன்று
கயல் மற்றும் எழில் இருவரும் கள்ள நோட்டு யார் மாற்றி வைத்திருப்பார்கள் என பேசிக்கொண்டிருக்கிறார்கள். தனது அம்மா தான் அதை செய்த்திருப்பார் என எழில் சொல்ல, அவர் இந்த சின்ன வேலை எல்லாம் செய்யமாட்டார் என கயல் கூறுகிறார்.
அதன் பின் கயலின் அண்ணன் வீட்டில் எல்லோருக்கும் தீபாவளி ட்ரெஸ் வாங்கி வந்து கொடுக்கிறார்.
அவர் தேவிக்கும் குழந்தைக்கும் ட்ரெஸ் கொடுத்துவிட்டு அதன் பின் விக்னேஷுக்கு ட்ரெஸ் கொடுக்க தேவி கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். அவர் அந்த உடையை தூக்கி போட எல்லோரும் ஷாக் ஆகின்றனர்.
கொந்தளித்த தேவி
"பெற்ற குழந்தையை பார்க்க வராத விக்னேஷ் ரொம்ப நல்லவனா, அம்மா பேச்சை கேட்டுகிட்டு என்னையும் என் குழந்தையையும் தூக்கி ஏறிய போகிறான், அவனுக்கு நீங்க தீபாவளி ட்ரெஸ் எடுத்து கொடுக்குறீங்களா. வக்கீல் வந்து சொல்லிட்டு போனதை மறந்துடீங்களா."
"இனி என் வாழ்க்கையில் விக்னேஷ் என ஒருத்தன் இல்லை என நினைக்க தொடங்கி ரொம்ப நாள் ஆச்சு. எனக்கு தெரியாமல் இந்த ட்ரெஸ் கொண்டு போய் அவன் வீட்டில் கொடுத்து அசிங்கப்பட்டுட்டு வராதீங்க" என தேவி சொல்கிறார்.
"உன்னை உன் புருஷன் கூட சேர்ந்து வைக்க தான் நாங்கள் எல்லோரும் முயற்சி செய்கிறோம். விக்னேஷ் உனக்காக வருவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என கயல் அட்வைஸ் கூறுகிறார்.
தீபாவளி கொண்டாடிய குடும்பம்
மறுநாள் தீபாவளியை மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.