கயல் சீரியல் நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்.. ஷூட்டிங் ஸ்பாட் வந்து ரகளை
சன் டிவியின் கயல் சீரியல் சின்னத்திரையில் தற்போது ஹிட் சீரியல்களில் ஒன்று. அதில் ஹீரோயின் கயலின் அண்ணன் மூர்த்தி என்ற ரோலில் நடித்து வருபவர் ஐயப்பன்.
எந்த பிரயோஜனமும் இல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் வந்து மோசமாக நடந்துகொள்ளும் நபராக தான் மூர்த்தி கதாபாத்திரம் ஆரம்பத்தில் காட்டப்பட்டு வந்தது.
ஆனால் நடிகர் ஐயப்பன் நிஜத்திலேயே அப்படி மாறிவிட்டார் என அவரது மனைவி விந்தியா பரபரப்பு புகார் கூறி இருக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட் சென்று மனைவி ரகளை
கயல் சீரியல் ஷூட்டிங் சென்னை மதுரவாயல் பகுதியில் ஒரு ஷூட்டிங் ஹவுசில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற ஐயப்பனின் மனைவி ரகளை செய்து இருக்கிறார்.
குடிக்கு அடிமையாகிவிட்ட ஐயப்பன் கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டுக்கு பணம் கொடுப்பதில்லை, குழந்தையை கூட பார்ப்பதில்லை என புகார் தெரிவித்து இருக்கிறார்.


பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதறியவர்கள் இலங்கை தாக்குதலுக்கு ஏன் கள்ள அமைதி? - சீமான் கேள்வி IBC Tamilnadu
