கயல் சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் வாங்கும் சம்பளம்.. விவரம் இதோ
Kayal serial actors salary: கயல் சீரியலில் நடித்து வரும் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கயல்
சன் டிவியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயல். சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் சின்னத்திரையில் டாப் 5-ல் உள்ளது.

இந்த நிலையில், வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி முதல் கயல் சீரியல் முடிவுக்கு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 1500 எபிசோட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

நீண்ட நாட்களாக ரசிகர்கள் இந்த சீரியலுடன், இதில் வரும் கதாபாத்திரங்களுடன் பயணித்து வருவதால் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.
சம்பளம்
இந்த நிலையில், கயல் சீரியலில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சஞ்சீவ் ஒரு நாளைக்கு ரூ. ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை சம்பளம் வாங்குகிறார். மேலும், கதாநாயகி சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு ரூ. 45 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

விக்னேஷ்வரனாக நடிக்கும் கோபிக்கும், அவருக்கு மனைவியாக நடிப்பவருக்கும் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். மேலும், ஐயப்பன் (மூர்த்தி), மீனாகுமரி (காமாட்சி), முத்து ராமன் (தர்மலிங்கம்) ஆகியோருக்கு ஒருநாளைக்கு ரூ.15,000 வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.