10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ
கயல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல்.
சைத்ரா மற்றும் சஞ்சீவ் இருவரும் புதிய ஜோடியாக இந்த சீரியலில் இணைய ரசிகர்களே ஆர்வமாக பார்க்க தொடங்கினார்கள். அப்பாவை இழந்த தனது குடும்பத்திற்கு ஒரு தூணாக இருந்து வருபவர் தான் கயல்.

தனது வாழ்க்கையை தாண்டி தனது குடும்பத்திற்காக அதிகம் யோசிக்கக் கூடியவர்.
இப்போது கதையில் ஆனந்தி திருமணம், ஆனந்தியால் விபத்தில் சிக்கிய ஷாலினி, மருத்துவமனையில் பிரச்சனை என இப்படியே பரபரப்பான கதைக்களத்துடன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

வீடியோ
சீரியல் ஒருபக்கம் பரபரப்பாக செல்ல கயலாக நடிக்கும் நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாவில் ஒரு அழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஒரு 10 நாட்களாக கடுமையான வலியில் இருந்துள்ளாராம், காரணம் அவர் தனது காதில் புதிய கம்மல் குத்தியுள்ளார். அது சந்தோஷம் என்றாலும் வலி இருந்ததாக பதிவு செய்துள்ளார்.