சன் டிவி கயல் சீரியல் நடிகர்கள் சம்பள விவரம்! ஒரு நாளைக்கே இவ்வளவா
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் தற்போது டிஆர்பியில் டாப் 5ல் இருந்து வருகின்றன. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்கள் கூட தற்போது டாப் 5ல் இடம்பிடிக்க திண்டாடி வருகின்றன.
கயல் சீரியல்
சன் டிவியின் கயல் சீரியல் தான் தற்போது டிஆர்பியில் முதலிடம் பிடித்து வருகிறது. சமீபத்தில் தொடங்கிய சீரியல் என்றாலும் இந்த தொடர் மற்ற முன்னணி சீரியல்களை முதல் வாரத்திலேயே பின்னுக்கு தள்ளிவிட்டது.
முதல் வாரத்தில் இருந்தே கயல் சீரியல் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் அதன் கதை தான்.
நடிகர்கள் சம்பளம்
இந்நிலையில் தற்போது சன் டிவியில் டாப் சீரியலான கயல் தொடரில் நடிக்கும் நடிகர்கள் சம்பளம் விவரம் வெளியாகி இருக்கிறார்.
ஹீரோயின் சைத்ரா ரெட்டி அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் ரூபாய் ஒரு நாளுக்கு பெறுகிறார். வில்லனாக நடிக்கும் முத்துராமன் தினமும் 15 ஆயிரம் ருபாய் சம்பளமாக பெறுகிறார்.
சஞ்சீவுக்கு 20 ஆயிரம் தரப்படுகிறதாம், மற்ற நடிகர்களுக்கு 10 ஆயிரத்தை விட குறைவான சம்பளம் தான்.