கயல் சீரியல் கிளைமாக்ஸ் போட்டோ பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
சன் டிவியில் நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கும் கயல் சீரியல் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. டிஆர்பி-யில் நல்ல ரேட்டிங் பெற்று முன்னணி தொடராக இருந்து வரும் இந்த சீரியல் சமீப காலமாக ரசிகர்கள் விமர்சனத்திற்கு ஆளாகி இருந்தது.
இந்த சீரியலில் ஹீரோ எழில் ஆக நடித்து வந்த சஞ்சீவ் திடீரென விலகி விட, கதையை பல்வேறு விதமாக நகர்த்த இயக்குனர் தொடர்ந்து முயற்சிகளை செய்து வந்தார்.
சீரியல் டீம் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சஞ்சீவ் நடிக்க வராத நிலையில் அவர் கோமாவில் இருப்பது போலவே கதையில் காட்டப்பட்டு வருகிறது.

கிளைமேக்ஸ்
இந்நிலையில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி கயல் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக இருக்கிறது. இன்று ஷூட்டிங் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருகின்றனர்.
அந்த போட்டோவில் எல்லா நடிகர்களும் இருக்கின்றனர், சஞ்சீவ் மற்றும் இல்லை. அதனால் கிளைமாக்ஸில் சஞ்சீவ் வரப்போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்களும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.