நள்ளிரவில் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஏற்பட்ட சோகம்- அப்படி நடந்திருந்தால் உயிருக்கே ஆபத்து ஆகியிருக்குமே?
கயல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று கயல். இந்த தொடரின் முக்கிய நாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார், சஞ்சீவ் நாயகனாக நடிக்கிறார்.
இருவரும் புதிய ஜோடியாக இணைந்திருப்பதால் இவர்களுக்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. அப்பா இல்லாத தனது குடும்பத்தை பாதுகாக்கும் ஒரு பெண்ணாக கயல் இருந்து வருகிறாள்.
டிஆர்பியிலும் எப்போதும் கயல் தொடர் டாப்பிலேயே இருந்து வருகிறது.

அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நேற்றிரவு, எனக்கு ஒரு திகிலூட்டும் அனுபவம் கிடைத்தது, அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
நள்ளிரவு 1 மணியளவில், நான் எனது வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தேன் - போரூர் மேம்பாலத்தில். அப்பகுதியில் டிடி சோதனை நடப்பதால் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மணிக்கு 10 கிமீ வேகத்தில் மெதுவாக சென்றன.
நான் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது,மேலே மெட்ரோ கட்டுமானப் பணியின் போது திடீரென ஒரு பெரிய சிமெண்ட் கலவை என் காரின் மீது விழுந்தது. இதன் தாக்கம் அதிர்ச்சியளிப்பதாகவும் மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது.
அதிர்ஷ்டவசமாக, நான் காயமடையவில்லை, ஆனால் சிமெண்ட் கலவை எனது காரில் ஒட்டிக்கொண்டது மற்றும் நான் அதைப் பற்றி எதுவும் செய்ய முன் கடினமாகிவிட்டது.
காரின் உள்ளே இருந்ததால் பிரச்சனை இல்லை நடந்து சென்றிருந்தாலோ, இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தாலோ உயிருக்கே ஆபத்தாகி இருக்குமே என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
இதேபோன்ற கேள்வியை எழுப்பி தான் சைத்ரா ரெட்டியும் இந்த சம்பவம் குறித்து பதிவு போட்டுள்ளார்.
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri