கயலை கொல்ல பார்த்த வில்லன் டாக்டர்.. கடைசி நொடியில் வந்த ட்விஸ்ட்
சன் டிவியின் கயல் சீரியலில் தற்போது கயல் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். சிகிச்சைக்கு பணம் செலுத்தினால் தான் சிகிச்சை செய்வேன் என வில்லன் டாக்டர் கூறிவிட்டதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய குடும்பத்தினர் பல விதங்களில் முயற்சித்து வருகின்றனர்.
கயலை காப்பாற்ற ஹீரோ எழில் வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வரும் நிலையில் அவரது அம்மா தூக்க மாத்திரை கலந்த ஜூஸ் கொடுத்து அவரை ரூமில் அடைத்துவைத்து விடுகிறார்.
அதன் பிறகு பல மணி நேரம் கழித்து கண்விழிக்கும் எழில் அவரது அம்மாவை லெப்ட் ரைட் வாங்கிவிட்டு அவரிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு ஹாஸ்பிடல் செல்கிறார்.

கொலை செய்ய முயற்சித்த டாக்டர்..
கயல் மீது இருக்கும் பகையால் இந்த சந்தர்ப்பத்தில் அவரை கொலை செய்ய திட்டம் போடும் டாக்டர், ஆக்சிஜன் டியூப்பில் குண்டூசி கொண்டு துளை போட்டு கொலை செய்ய பார்க்கிறார்.
ஆனால் அந்த நேரம் பார்த்து கயலின் தங்கை உள்ளே வர, அவரை திட்டு அனுப்பிவிடுகிறார் வில்லன் டாக்டர்.
அப்போது போனில் பேசிக்கொண்டிருக்கும் எழிலுக்கும் சந்தேகம் வர, அந்த டாக்டரிடம் போனை கொடு என சொல்லி, அவனை விளாசுகிறார்.
கயலை நீ கொலை செய்ய பார்ப்பது எனக்கு தெரியும், நீ மட்டும் இப்போ போகல, என் பசங்களை விட்டு உன் ரெண்டு பொண்டாட்டி மட்டும் செட்டப்களை தூக்கிடுவேன் என சொல்லி மிரட்டுகிறார்.

கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu