ஹாஸ்பிடலில் சீரியஸாக இருக்கும் கயல்.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய வில்லி
சன் டிவியின் கயல் சீரியலில் தற்போது எழில் கண் முன்பே கயல் மீது கார் மோதிவிட்டு சென்றுவிடுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை எழில் தான் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்கிறார்.
வில்லி வேதவள்ளியின் அண்ணன் தான் கயல் மீது காரை ஏற்றி கொலை செய்ய பார்த்திருக்கிறார். அவர் வள்ளிக்கு போன் செய்து விஷயத்தை கூறியதும் அவர் மகிழ்ச்சி ஆகிறார். தன்னை சிறைக்கு அனுப்பிய கயலை பழிவாங்கிவிட்டதாக அவர் மகிழ்ச்சியாக பேசுகிறார்.
பதறிய கயல் குடும்பம், மோசமாக பேசிய வில்லி
கயல் ஹாஸ்பிடலில் சீரியசாக இருக்கிறார். அவருக்கு ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது குடும்பத்தினர் வந்து பதறுகின்றனர். கயல் பற்றி கூறி அழுகின்றனர்.
அப்போது எழில் குடும்பத்தினரும் அங்கு வருகின்றனர். எழிலின் அம்மா மோசமாக பேசுகிற பேச்சு எல்லோருக்கும் கோபத்தை ஏற்படுத்துகிறது. 'அவங்க வீட்ல ஒன்னு போனா இன்னொன்னுனு நெறைய பெத்து வெச்சிருக்கா.. அவ கூட சேர்ந்து உனக்கு எதாவது ஆகி இருந்தா.. எனக்கு இருக்குறது ஒரே பையன்' என சொல்கிறார். அவர் பேசுவதை எழிலின் அப்பா கண்டிக்கிறார்.
இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.