கயல் எடுத்த அதிரடி முடிவு.. தர்ம அடி வாங்கிய வில்லன் பெரியப்பா! கயல் சீரியலில் இன்று
சன் டிவியின் கயல் சீரியலில் பல வாரங்களுக்கு பிறகு தற்போது தான் கயல் கம்பேக் கொடுத்திருக்கிறார். அவர் ஹாஸ்பிடலில் நினைவில்லாமல் இருந்த நிலையில் குணமாகி திரும்பி இருக்கிறார்.
கயல் சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்பதால் ஒரு குடிகாரனை திருமணம் செய்துகொள்ள தங்கை ஆனந்தி ஒப்புக்கொள்கிறார். அவரை ஏமாற்றி வில்லன் பெரியப்பா அந்த திருமணத்தை நடத்தி வைக்க முற்பட்ட நிலையில், கடைசி நொடியில் கயல் மற்றும் குடும்பத்தினர் சென்று தடுத்துவிடுகின்றனர்.
அதன் பின் கயல் மற்றும் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து பெரியப்பா தர்மலிங்கத்தை திட்டி தீர்க்கின்றனர்.
தர்மலிங்கத்திற்கு தர்ம அடி
உங்கள் சுயரூபம் தற்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது, இனி எங்கள் வீட்டு பக்கம் வரக்கூடாது, நாங்களும் வரமாட்டோம், நீங்க செத்துடீங்கனு நெனைச்சிக்கிறோம் என கோபமாக சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.
அதன் பிறகு மாப்பிள்ளை வீட்டார் எல்லாம் சேர்ந்து தங்களை ஏமாற்றிய தர்மலிங்கத்துக்கு தர்ம அடி கொடுத்து அனுப்புகின்றனர்.
மறுபுறம் கயல் தங்கையை கூட்டுக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார். இனி உன்னை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என கயலுக்கு ஆறுதல் கூறுகின்றனர். தனது சிகிச்சைக்கு பணம் கொடுத்தவருக்கு கால் செய்து நன்றி கூறுகிறார் கயல்.
இன்றைய எபிசோடு இத்துடன் முடிந்தது.