பொய் சொல்லி ஏமாற்றும் பெரியப்பா.. கயல் தங்கை நிச்சயதார்த்தத்தில் வரப்போகும் பெரிய பிரச்சனை
சன் டிவி கயல் சீரியலில் தற்போது கயலின் தங்கை ஆனந்தி திருமணம் பற்றிய ட்ராக் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
மீனாட்சி குடும்பத்துடன் கயல் குடும்பம் திருமண பேச்சில் இருக்கும் நிலையில் அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என வடிவு முயற்சி செய்கிறார். ஆனால் அது நடக்கவில்லை. விரைவில் ஆனந்தியை தனது மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும் என மீனாட்சி நினைக்கிறார்.
நிச்சயதார்த்தத்தை 3 மணி நேரம் தள்ளி வைக்கலாம் என ஆனந்தியின் பெரியப்பா சொன்னதை நம்பி இருக்கிறார் மீனாட்சி. ஆனால் கயல் குடும்பம் மூன்று வருடம் நிச்சயத்தை தள்ளி வைக்க நினைத்து அவரிடம் பேசுகிறார்கள்.

மீனாட்சி 3 வருடம் தள்ளி வைக்க ஒப்புக்கொண்டார் என நினைத்துக்கொண்டு கயல் குடும்பம் மகிழ்ச்சி ஆகிறது. அந்த விஷயத்தை தெரிந்தும் பெரியப்பா சும்மா அமைதியாக இருக்கிறார்.
மீனாட்சி பிறந்தநாள் பார்ட்டியில் எல்லோரும் கலந்துகொள்கின்றனர். மறுநாள் காலை தான் நிச்சயதார்த்தம் செய்ய நினைத்திருக்கிறார் மீனாட்சி. அப்போது தான் பிரச்சனை வரும் என எதிர்பார்க்கலாம். அது நாளைய எபிசோடில் தான் தெரியவரும்.

தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan