கயல் சீரியலில் வந்த பெரிய ட்விஸ்ட் .. பிரபு போஸ்ட் மார்ட்டம் ரிசல்டில் காத்திருந்த அதிர்ச்சி
கயல் சீரியலில் பிரபுவை தாங்கள் கொலை செய்து புதைத்துவிட்டதாக தான் அனந்தி மற்றும் கயல் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பமும் நினைத்துக்கொண்டிருக்கிறது. ஏற்க்கனவே கயலின் அண்ணன் மூர்த்தி போலீசில் சரணடைந்து நான் தான் கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
அவரை எப்படி வெளியில் கொண்டு வருவது என தெரியாமல் கயல் மற்றும் எழில் விழித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் தான் பிரபுவின் பிணத்தை போலிஸ் தோண்டி எடுத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார்.
போஸ்ட் மார்ட்டம் ரிசல்ட் வரட்டும், அதில் கைரேகை ஒத்துபோனால் நிச்சயம் கயல் மற்றும் ஆனந்தியை கைது செய்து இழுத்து வருவேன் என போலிஸ் இன்ஸ்பெக்டர் கூறி மிரட்டுகிறார்.
போஸ்ட் மார்ட்டம் ரிசல்ட்.. ட்விஸ்ட்
உடலை போஸ்ட் மார்ட்டம் செய்து பார்த்த டாக்டர் வெளியில் வந்து எல்லோரிடமும் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை கூறுகிறார். பிரபுவின் வயிற்றில் விஷம் இருக்கிறது. அது தான் அவரை உயிரிழப்புக்கு காரணம், ஆணியால் அடிபட்டதெல்லாம் சின்ன காயம் தான் என கூறுகிறார்.
அதை கேட்டு கயலின் வில்லன் பெரியப்பா மற்றும் எழிலின் வில்லி அம்மா இருவரும் ஷாக் ஆகிறார்கள். அந்த விஷத்தை கொடுத்தது கயலாக தான் இருக்கும் என போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கூறுகின்றனர்.
இந்த விஷயத்தில் இருந்து கயல் குடும்பம் தப்பிக்குமா என்பது வரும் நாட்களில் தான் தெரியும்.