காதலை கூறிய பின், விபத்தில் சிக்கிய கயல்.. சீரியல் ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கிய ப்ரொமோ
சன் டிவியின் கயல் சீரியலில் தற்போது கயல் குடும்பத்திற்கு வந்திருந்த எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விட்டது. அவரது அண்ணன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், பிரபு கொலைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து நிரூபித்துவிட்டார் எழில்.
இது ஒட்டுமொத்த கயல் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் பின் கயல் போன் செய்து எழிலை சந்திக்க வேண்டும் என வர சொல்கிறார்.
விபத்து
நீண்ட காலத்திற்கு பிறகு அவர் எழிலிடம் தனது காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார் கயல்.
ஆனால் அதன் பின் யாரும் எதிர்பார்க்காத வகையில் கார் அவர் மீது மோதி தூக்கி வீசப்படுகிறார். இந்த விபத்தில் இருந்து கயல் மீண்டு வருவாரா?
ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சி ஆக்கி இருக்கும் ப்ரொமோ இதோ..