கீர்த்தி சுரேஷின் மகனுக்கு பிறந்தநாள் ! இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட போட்டோ..

keerthy suresh
By Jeeva Sep 03, 2021 01:10 PM GMT
Report
105 Shares

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் படத்திலும் நடிக்கவுள்ளார்.

மேலும் இயக்குனர் செல்வராகவனுடன் இவர் இணைந்து நடித்துள்ள சாணி காயிதம் திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி தன்னுடைய செல்ல நாய்க்குட்டியை சொந்த மகன் போலவே வளர்த்து வருகிறார். மேலும் தற்போது அவரின் இன்ஸ்டா பக்கத்தில் “எனது ஆண் குழந்தைக்கு 3 வயதாகிவிட்டது. இதை என்னால் நம்பவே முடியவில்லை.

நான் முதல்நாளில் பார்த்த மாதிரியே இருக்கிறது. எனது சிறந்த அல்லது இருண்ட நாட்களில் நீங்கள் என்னை நிரப்பும் மகிழ்ச்சி கற்பனை செய்ய முடியாதது. என்மீது அளவுகடந்த அன்பு செலுத்தும் உன்னை நான் நேசிக்கிறேன் அன்பே Nyke" என தனது செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.  

கீர்த்தி சுரேஷின் மகனுக்கு பிறந்தநாள் ! இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட போட்டோ.. | Keer Thi Sur Nyke


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US