வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் ! வேற லெவல் லைன் அப்..

keerthy suresh
By Jeeva Aug 14, 2021 10:30 AM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் வரிசையாக திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார், அந்த வகையில் அவரின் திரைப்படங்கள் குறித்த விவரங்களை தான் தற்போது பார்க்கவுள்ளோம்.

1. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த. இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் நடித்து வருகிறார்.

2. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள மரக்கார் - அரபிக் கடலின்டெ படத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.

3. மேலும் மலையாளத்தில் வாசி என்ற படமும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4. தெலுங்கில் ஆதி, ஜெகபதி பாபுடன் இவர் நடித்துள்ள குட்லக் சகி என்ற நகைச்சுவை திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

5. மகேஷ் பாபுவுக்கு இவர் ஜோடியாக நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா 2022 ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகிறது.

6. மேலும் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளனர்.

7. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கவும் கீர்த்தி சுரேஷை கேட்டுள்ளனர்.

8. மேலும் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US