என் வீட்டுக்கு வந்து அதை பார்த்தீங்களா?.. பயில்வானின் கேள்வியால் கோபமடைந்த கீர்த்தி பாண்டியன்
கீர்த்தி பாண்டியன்
நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணகி திரைப்படம் வருகிற 15-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் அம்மு அபிராமி, ஷாலின் சோயா, வித்யா பிரதீப் எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
இப்படம் வெளியாகும் அதே தினத்தில் கீர்த்தி பாண்டியனின் கணவர் அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
பதிலடி
இந்நிலையில் கண்ணகி படத்தின் பிரஸ் ஷோ திரையிடப்பட்டது. அதன் பின்னர் படக்குழுவினர் அனைவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கீர்த்தி பாண்டியனிடம், "வீட்டில் தான் கணவன் மனைவி சண்டைனா, இந்த வாரம் திரையரங்கில் இரண்டு பேரோட படமும் மோதுதே" என்று கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த கீர்த்தி பாண்டியன், "நாங்கள் எப்போது சண்டை போட்டோம். நீங்கள் எங்கள் வீட்டில் வந்து பாத்தீங்களா?? எங்களுக்கு இடையே சண்டையும் இல்லை போட்டியும் இல்லை" என்று கூறினார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
