மிரட்டலான இயக்குனருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.. இருவருமே தேசிய விருது வென்றவர்கள்
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதுமட்டுமின்றி தெலுங்கில் உருவாகி வரும் தசரா, போலோ ஷங்கர் ஆகிய படங்களும் கீர்த்தியின் கைவசம் உள்ளது.
மிரட்டலான கூட்டணி
இந்நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் சோலோ ஹீரோயினாக கீர்த்தி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதையை இயக்குனர் சுதா கொங்கரா தற்போது எழுதி வருகிறாராம்.

சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் பணிகள் முடிந்த பின், கீர்த்தி சுரேஷின் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா இருவருமே தேசிய விருது வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவிலிருந்து 1.3 மில்லியன் மதிப்புள்ள..கடத்தலில் ஈடுபட்ட அவுஸ்திரேலியர் அதிரடி கைது News Lankasri
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu