தங்கத் தாலி மாற்றாமல் மஞ்சள் கயிறு அணிந்துகொண்டு இருப்பது ஏன்?- கீர்த்தி சுரேஷ் விளக்கம்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ், தனது நீண்டநாள் காதலர் ஆண்டனி என்பவரை கடந்த டிசம்பர் 12ம் தேதி கோவாவில் திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் தான் ஹிந்தியில் முதன்முறையாக நடித்துள்ள பேபி ஜான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் தனது கழுத்தில் மஞ்சள் கயிறுடன் வந்தது ரசிகர்களால் முக்கியமாக கவனிக்கப்பட்டது.
நடிகையின் பதில்
திருமணம் முடிந்த கையோடு மஞ்சள் கயிறுக்கு பதிலாக தங்க தாலி மாற்றாமல் இருப்பது ஏன் என கேட்டுள்ளனர்.
அதற்கு கீர்த்தி சுரேஷ், ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை அதை அகற்றக்கூடாது, மஞ்சள் கயிறு அணிந்திருப்பதற்கு ஒரு காரணமும் உள்ளது.
ஒரு நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அது ஜனவரி இறுதியில் வருகிறது, அப்போது மாற்றுவோம் என கூறியுள்ளார்.