கீர்த்தி சுரேஷ் குறித்து தவறாக பேசிய நபர்! போலீஸில் புகார் அளித்த அவரின் தந்தை..
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷை மிகவும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டும் ஒருவரின் வீடியோ கேரளா சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோ நடிகர் சங்க தலைவர் மோகன்லாலின் கவனத்திற்கு வர, அவர் உடனடியாக கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு சுரேஷ் குமாருக்கு அனுப்பி, இது குறித்து போலீஸில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் திருவனந்தபுறம் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இது குறித்து பேசிய சுரேஷ் குமார். "என் மகள் நடித்துள்ள மரைக்காயர் படத்தை தோல்வியடை செய்வதற்காக பலர் அப்படம் குறித்து மோசமாக பேசி வீடியோவை பரப்பி வருகின்றனர்.
மேலும் அவர்கள் என் மகள் குறித்து மிகவும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது குறித்து நான் போலீஸில் புகார் அளித்துளேன், குற்றவாளியை விரைவில் கைது செய்யவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan