அப்செட் ஆகிவிட்டேன் என்றால் அதை செய்வேன்.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் வலம் வருகிறார். ஆனால் பேபி ஜான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.
சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஓபன் டாக்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "நான் அப்செட் ஆகிவிட்டேன் என்றால் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக்கொண்டு தனியாக ட்ரைவ் செய்வேன், அப்போது நல்ல இசையை கேட்பேன்.
அதுமட்டுமின்றி, வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். அப்செட் என்ன வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் போதும் அவை அனைத்தும் காணாமல் போய்விடும்" என்று தெரிவித்துள்ளார்.