இது வரமா, சாபமா என்பது தெரியவில்லை- வருத்தத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்
ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா.
இவர் தற்போது தெலுங்கில் புஷ்பா 2, ஹிந்தியில் Animal என அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார்.
அண்மையில் நடிகை ராஷ்மிகா முகம் எடிட் செய்யப்பட்டு ஒரு மோசமான வீடியோ வைரலாகி வந்தது, அந்த வீடியோவிற்கு பிரபலங்கள் பலருமே எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து டீப் ஃபேக் என்ற தொழில்நுட்பம் மூலம் இந்த ஆபாச வீடியோ எடிட் செய்யப்பட்டிருந்தது.
கீர்த்தி சுரேஷ்
போலி வீடியோ விவகாரம் அச்சத்தை தருகிறது. சமூக வலைதளங்களில் அன்பு, நேர்மறையான விஷயம், எச்சரிக்கை பதிவுகள், புதிய தகவல்கள் தான் பகிர வேண்டுமே தவிர, இதுபோன்ற முட்டாள்தனமான வீடியோக்களை அல்ல என காட்டமாக பதிவிட்டுள்ளார்.