உடல் எடையை சுத்தமாக குறைத்த ரகசியத்தை கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்...
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ், மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் 2013ம் ஆண்டு கீதாஞ்சலி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்.
தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
நடிகையர் திலகம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷிற்கு இந்த படத்திற்காக தேசிய விருது எல்லாம் கிடைத்தது. கடைசியாக தமிழில் ரகு தாத்தா படம் வெளியாக ஹிந்தியில் பேபி ஜான் என்ற படம் வெளியாகி இருந்தது.
தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்து ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.
வெயிட் லாஸ்
சினிமாவில் நுழைந்தபோது கொஞ்சம் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் சில வருடங்களுக்கு முன் தனது உடல் எடையை சுத்தமாக குறைத்திருந்தார்.
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில், திருமணத்துக்குப் பிறகு உடல் எடை சந்து கூடிவிட்டேன். இதனால் கார்டியோ உள்ளிட்ட பயிற்சிகளை செய்து உடல் எடையைக் குறைக்க போராடினேன்.
வாரத்துக்கு 5 மணி அடிப்படையில் உடற்பயிற்சி செய்து சுமார் 9 கிலோ எடையைக் குறைத்து இருக்கிறேன்.
சரியான பயிற்சிகளும் திட்டமிட்ட உணவு பழக்கங்களும் ஒன்று சேரும்போது எதிர்ப்பார்த்த தீர்வை பெற முடிவும். ஆண்களைப் போல பெண்களும் உடற்பயிற்சியில் அக்கறை காட்டுவது நல்லது என தெரிவித்துள்ளார்.