சினிமாவில் 8 மணி நேரம் வேலை.. நடிகை கீர்த்தி சுரேஷ் வெளிப்படை பேச்சு!
கீர்த்தி சுரேஷ்
தீபிகா படுகோன் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என்று வைத்த கோரிக்கை பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால், இந்த கருத்துக்கு சில நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர்.
இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா அவரது கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்போது கீர்த்தி சுரேஷும் 8 மணி நேரம் வேலைக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.

வெளிப்படை பேச்சு!
அதில், " நாங்கள் வேலையை முடித்து வீடு திரும்ப இரவு 10 மணி ஆகிறது. தொழில்நுட்ப குழுவினர் எங்களை விட மிகவும் முன்னதாகவே செட்டுக்கு வந்துவிடுவார்கள்.
அவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள். இதனால் நல்ல ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் சவாலாகி விடுகிறது.
எல்லோருக்கும் எட்டு மணிநேர தூக்கம் தேவை. ஆனால் நடிகர்களுக்கு அது அரிது. தொழில்நுட்ப குழுவினர் சில நேரங்களில் நான்கு மணிநேரம் கூட தூங்குவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
