மீண்டும் கர்ப்பிணி பெண் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. அதுவும் இந்த சென்சேஷன் ரீமேக் படத்திலா
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் வெளியான 'மிமி' திரைப்படம் கூட, சென்சேஷன் ஹிட் ஆனது.
இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், மிகவும் சவாலான கர்ப்பிணி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற 'பரம் சுந்தரி' பாடலும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மேலும், நடிகை கீர்த்தி சனோன் நடித்திருந்த கர்ப்பிணி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே, தமிழில் வெளியான பென்குயின் படத்தில் கர்ப்பிணி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.