ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்.. என்ன காரணம் தெரியுமா?
கீர்த்தி சுரேஷ்
மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார். இவற்றில் ரகுதாத்தா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
ரசிகரிடம் மன்னிப்பு..
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகர் ஒருவர், 233 நாட்கள் கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ச்சியாக ட்வீட் செய்து இருக்கிறார்.
இந்த சூழலில் 234ஆவது நாளில் அவரது ட்வீட்டை கவனித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதில், "234 என்னுடைய பேன்சி நம்பர். தாமதமாக ரிப்ளை செய்ததற்கு மன்னிக்கவும். lots of love" என்று கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டு உள்ளார்.
Ooohh 234 ! That’s a fancy number! ?sorry that you had to wait! Lots of love ?❤️
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 24, 2024