கோலகலமாக நடந்த இயக்குநர் அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டி! நடிகை கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த உடை
அட்லீ
தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் அட்லீ, விஜய்யுடனான தொடர் வெற்றி கூட்டணிகளுக்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.
அதன்படி ஷாருக் கான் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் அட்லீ. அப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இதனிடையே சமீபத்தில் இயக்குநர் அட்லீ அவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரின் பிறந்தநாள் பார்ட்டி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிறந்தநாள் பார்ட்டி
அந்த வகையில் நேற்று அட்லீ அவரின் பிறந்தநாள் பார்ட்டியில் தளபதி விஜய் மற்றும் ஷாருக் கானுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதனால் ஜவான் திரைப்படத்தில் விஜய்யின் கேமியோ அப்படத்தில் இருக்குமா என எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அட்லீ மற்றும் கதிருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து இருந்தார்.
மேலும் விஜய், ஷாருக் கான், அட்லீ உள்ளிட்டோரை போல அவரும் கருப்பு நிற உடை தான் அணிந்திருந்தார். இதோ அந்த புகைப்படம்
மீண்டும் தொடங்கிய விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை- போஸ்டர் மூலம் ரசிகர்களின் சேட்டை