தொடர்ந்து மூன்று படங்களில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்.. அதிரடியான முடிவு
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இவர் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல், முதல் முறையாக செல்வராகவன் நடிக்கும், சாணி காயிதம் படத்திலும், செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளார் கீர்த்தி.
தமிழில் அஜித் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
இதில் ஹீரோவாக நடிகர் சிரஞ்சீவி அஜித் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இதன்முலம் தொடர்ந்து 3 படங்களில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.