நடிகை கீர்த்தி சுரேஷ் பாதுகாத்து வந்த ரகசியம்.. விரைவில் குட் நியூஸ்!
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் பாலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிந்தியில் அவரது முதல் படமான பேபி ஜான் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை.
குட் நியூஸ்!
இந்நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட்டில் மீண்டும் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதாவது இந்தியில் உருவாகும் ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி இருக்கிறாராம்.
ஆனால், இது தொடர்பான தகவலை வெளியில் சொல்லாமல் இருந்தார் கீர்த்தி. தற்போது இந்த செய்தி வெளியாகி உள்ளது. விரைவில் அவர் நடிக்கும் பாலிவுட் படம் குறித்த குட் நியூஸை கீர்த்தி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
