சிறு வயதில் தந்தையின் மடியில் தவழும் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் வெளிவரவுள்ளது.
மேலும் போலோ ஷங்கர், ரகு தாத்தா, சைரன் ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
அவ்வப்போது தன்னுடைய படப்பிடிப்பில் எடுக்கும் புகைப்படங்கள், போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவு செய்வார்.
சிறு வயது புகைப்படம்
அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய குழந்தை பருவத்தில் தந்தையின் மடியில் தவழும் அழகிய புகைப்படத்தை பதிவு செய்து, தந்தையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷின் இந்த சிறு வயது புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அஜித்தின் ஆசை பட புகழ் நடிகை சுவலட்சுமியா இது?- திருமணத்திற்கு பின் எப்படி உள்ளார் பாருங்க