ரஜினிக்காக இப்படியொரு விஷயத்தை செய்தாரா கீர்த்தி சுரேஷ்.. என்ன தெரியுமா
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக மாமன்னன் திரைப்படம் வெளிவந்தது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை தொடர்ந்து சைரன், ரகு தாத்தா, கண்ணிவெடி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இது மட்டுமின்றி ஹிந்தியில் வருண் தவானுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் வெளிவந்த விஜய்யின் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் இது. இப்படத்தை அட்லீ தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பினால் பல சூப்பர்ஹிட் கதாபாத்திரங்களை திரையில் காட்டியுள்ளார். அதே போல் சில நல்ல கதாபாத்திரங்களையும் தவற விட்டுள்ளார்.
திரிஷாவை பற்றி கீழ்த்தனமாக பேசிய மன்சூர் அலிகான்.. கொந்தளித்த லோகேஷ் கனகராஜ், விளக்கம் கொடுத்த நடிகர் மன்சூர்
கீர்த்தி தவறவிட்ட படங்கள்
ஆம், கடந்த 2021ஆம் ஆண்டு ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த படம் அண்ணாத்த. இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு வந்த அதே சமயத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
ஆனால், அவர் பொன்னியின் செல்வன் படத்தை வேண்டாம் என நிராகரித்துவிட்டு அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார்.
அதே போல் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக நாணி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த ஷாம் சிங்க ராய் படத்தையும் நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.