விஜய்யை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ்.. படக்குழுவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்
கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் நானி ஜோடியாக தசரா என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்த படம் மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் அதை இந்தியா முழுவதும் ப்ரோமோஷன் செய்யும் பணிகளை செய்து வருகின்றனர். புஷ்பா படம் போல இந்த படமும் பான் இந்தியா ஹிட் ஆகும் என படக்குழுவினர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

தங்க காசு கிப்ட்
தற்போது கீர்த்தி சுரேஷ் தசரா படக்குழுவில் இருந்த 130 பேருக்கும் தலா 10 கிராம் தங்கக்காசு கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார்.
மொத்தமாக 75 லட்சம் ருபாய் அளவுக்கு கீர்த்தி சுரேஷ் படக்குழுவுக்கு கிப்ட் ஆகவே கொடுத்து இருக்கிறார். பொதுவாக விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படி தங்கம் கிப்ட் ஆக கொடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். தற்போது கீர்த்தி சுரேஷும் அந்த லிஸ்டில் இணைந்து இருக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நகை திருடியது இவர்தான்! அதிரடியாக கைது செய்த போலீசார்
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu